தெய்வ நம்பிக்கை என்பது ஒருபுறம் இருந்தால்கூட உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது. - விவேகானந்தர்....... ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றி கொள்ள நினைப்பதில்லை- லியோ டால்ஸ்டாய்.

Sunday, 29 January 2012

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.

அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
இவர்களின் கணக்கு ஒரு சில நேரங்களில் முடங்கி போய்விடும். அந்த நேரத்தில் அவர்களின் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துவதற்கு மூன்று வழிகளில் உள்ளது.
அவை Standard, HTML and Mobile. Standard வகையில் ஏதேனும் பிழை இருப்பின் மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
பெரும்பாலான நேரங்களில் Standard வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளையில் மற்ற இரண்டு வழிகளில் மின்னஞ்சலை பயன்படுத்தலாம்.
HTML வகையில் சென்று பெறுவது முதலில் நீங்கள் இந்த http://mail.google.com/mail/?ui=html  இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை புக்மார்க் செய்து வைத்துக் கொண்டால், Standard வகையில் பிரச்னை ஏற்படும் போது இதனைப் பயன்படுத்தலாம்.
கூகுள் மெயிலின் Mobile பதிப்பு உங்களது கைபேசிகளுக்கானது. இதனை உங்களது கணணியில் பெறுவதற்கு உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும்.
ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறுவதற்கு http://mail.google.com/mail/x/gdlakb/gp/என்ற முகவரியினை டைப் செய்து ஜிமெயிலை பெறலாம்.

/>

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More